தேனி:10 ஆண்டுகளுக்குப் பிறகு உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரை நடந்த ரயில் சோதனை ஓட்டத்தில் கலந்துகொண்ட தேனி எம்.பி., ஓ.பி. ரவீந்திரநாத் ரயிலை மலர்த் தூவி வரவேற்றார்.
மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் விளையக்கூடிய ஏலம், காபி, தேயிலை உள்ளிட்ட நறுமணப் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது தான் மதுரை - போடி ரயில் பாதை. தொடக்கத்தில் சரக்கு ரயிலாக இருந்த இவ்வழித்தடம், காலப்போக்கில் பயணிகள் போக்குவரத்திற்கு மீட்டர் கேஜ் ரயிலாக மாற்றப்பட்டது. இதையடுத்து அகல ரயில் பாதையாக தரம் உயர்த்துவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மதுரை - போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
10ஆண்டுகள் ரயில் சேவை நிறுத்தம்:
ஆனால், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றன. இதனால், 10 ஆண்டுகள் ரயில் சேவை இல்லாத மாவட்டமாக தேனி இருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின. தற்போது 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 கி.மீ., தூரமுடைய மதுரை - போடி அகல ரயில் பாதையில் முதற்கட்டமாக உசிலம்பட்டி வரையிலான 37 கி.மீ., பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து, கடந்த ஜனவரியில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி வரையில் பணிகள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கி.மீ., தூரத்திற்கு இன்று (டிச.16) சோதனை ஓட்டம் நடைபெற்றது. உசிலம்பட்டியிலிருந்து விநாடிக்கு 120 கி.மீ., வேகத்தில் பயணித்த ரயில் ஆண்டிபட்டி, கணவாய் பகுதிகளில் மட்டும் 80 முதல் 90 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது.
ரயிலை வரவேற்ற தேனி மக்கள்: