தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மோடியைப் போல குகை தேடி அலையும் ஓபிஎஸ்-இபிஎஸ்...!'

தேனி: மோடியைப் போல ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் குகையைத் தேடி அலைகின்றனர் என ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன் கலாய்த்திருக்கிறார்.

maharajan

By

Published : May 19, 2019, 12:48 PM IST

தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம் வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தை திமுக வேட்பாளர் மகாராஜன் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் மகன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே இந்த மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. ஆனால் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது. திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த மறுவாக்குப்பதிவினால் எங்களுக்குத்தான் கூடுதலான வாக்குகள் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திமுக வேட்பாளர் மகாராஜன் பேட்டி


மேலும் அவர், இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். வருகின்ற ஜூன் 3ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக அமருவார். அதனால் இப்போதே காவல் துறையின் பிடியில் இருந்து தப்புவதற்கு மோடி குகையைத் தேடி அமர்ந்துவிட்டார். அதுபோல ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் ஓடி ஒளிந்துகொள்ள குகையைத் தேடி அலைகின்றனர். இவர்களுக்கு எந்தக் குகையும் கிடைக்கப் போவதில்லை என்றும் அவர் கலாய்த்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details