தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிகளை மீறிய அதிமுகவினர்- காவலர்களுடன் வாக்குவாதம்!

தேனி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியானதும், ஆண்டிபட்டியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

admk

By

Published : Mar 18, 2019, 9:32 AM IST

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலுடன் சேர்த்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில்18 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை நேற்று (மார்ச் 17) அமமுக, அதிமுக, திமுக உள்ளிட்டக் கட்சிகள் வெளியிட்டன.

அதன்படி, தேனி நாடாளுமன்றத் தொகுதி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக, அதிமுக தலைமை அறிவித்தது.

இதில் அதிமுக சார்பில் தேனி நாடாளுமன்றத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஆ.லோகிராஜன், பெரியகுளம் தொகுதிக்கு முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுகவினர் இந்த அறிவிப்பு செய்தி வெளியானதும் அவற்றைக் கொண்டாடத் தயாராகினர்.

அதற்காக ஆண்டிபட்டி வைகை அணை சாலையில் உள்ள எம்ஜிஆர்சிலை அருகே நேற்றிரவு 10 மணிக்கு மேல் ஆண்டிபட்டி பேரூர் கழகச் செயலாளர் முத்துவெங்கட்ராமன் தலைமையில் பட்டாசு வெடிக்க ஒன்றுகூடினர்.

ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறையின்படி இரவு 10 மணிக்கு மேல் எந்தக் கூட்டம், கொண்டாட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லாததால், அங்கிருந்த காவல் துறையினர் அதிமுகவினரை தடுத்தனர். ஆனால் அதிமுகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்வதாக எச்சரித்தும், அதை பொருட்படுத்தாமல் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் வாழ்க! என கோஷமிட்டு, பட்டாசு வெடிக்கத் தொடங்கினர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details