தேனி மாவட்டம் கம்பத்தில் இயங்கிவருகிறது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு நேற்று மாலை கையில் அரிவாளுடன் உள்ளே நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த அலுவலக ஊழியர்களிடம் தனது மனைவியிடம் ஆபாசமாக பேசியது யார் என்று அரிவாளை காட்டி மிரட்டத் தொடங்கினார்.
அச்சமடைந்த அலுவலக ஊழியர்கள் அந்த நபரிடம் நாசுக்காக பேச்சுக் கொடுத்து அலுவலகத்திற்கு வெளிப்பக்கம் பூட்டு போட்டுவிட்டனர். பின்னர் அவரிடம் பேசியபோது, தன் மனைவிக்காக மாத தவணையில் செல்போன் வாங்கி, அதற்கான மாதாந்திரத் தொகையை கட்ட சொல்லி பைனான்ஸ் அலுவலகத்திலிருந்து தனது மனைவிக்கு அழைப்பு வந்ததாக கூறினார்.
இதுகுறித்து தொலைபேசியில் பேசிய அலுவலக ஊழியர் ஒருவர், தன் மனைவியிடம் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். யார் அந்த நபர்? எனக்கேட்டு பைனான்ஸ் அலுவலகத்தில் கையில் அரிவாளுடன் மிரட்டல் விடுத்தார். ஒருகட்டத்தில் அங்கு இருந்த ஊழியர் ஒருவரை வெட்டுவதற்கும் முயற்சி செய்தார்.