தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சரை அவதூறாகப் பேசிய திமுக பிரமுகரின் மகன்: கைது செய்யக்கோரி அதிமுகவினர் புகார்! - அதிமுகவினர்

தேனி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசி சமூக வலைதளத்தில் காணொலி வெளியிட்ட திமுக பிரமுகரின் மகனை கைது செய்யக்கோரி மாவட்ட அதிமுகவினர் தேவதானப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அதிமுகவினர்
அதிமுகவினர்

By

Published : Nov 23, 2020, 8:43 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் குணசேகரன். திமுக பிரமுகரான இவரது மகன் நிபந்தன் சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்துவிட்டு, தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்யவுள்ளார்.

இந்நிலையில் நிபந்தன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசி, அதனை சமூக வலைதளங்களில் காணொலியாக வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் காணொலி பரவி வைரலானதைக் கண்ட அதிமுகவினர் கொதிப்படைந்தனர். தொடர்ந்து அவதூறு பரப்பிய திமுக பிரமுகரின் மகனான நிபந்தனை கைது செய்யக்கோரி, மாவட்ட அதிமுக பொறுப்பாளர் சையதுகான் தலைமையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (நவ.23) தேவதானப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துகுமார், அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதற்குப் பிறகு அதிமுகவினர் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க:குடும்ப தகராறு - மனைவியின் இரண்டாவது கணவர் குத்திக்கொலை

ABOUT THE AUTHOR

...view details