தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்றம் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி இடைத்தேர்தல் குறித்து அதிமுக கூட்டணி கட்சிகளின் நகர் ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தேனி பாராளுமன்ற வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார், பெரியகுளம் சட்டமன்ற தனித் தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.
'ஈவிகேஎஸ் இளங்கோவன் சொந்த ஊருக்கு திரும்ப ஓடுவார்' - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!
தேனி: நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வியடைந்து, சொந்தவூரான ஈரோட்டிற்கே திரும்புவார் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் ஆர்.பி உதயக்குமார்
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசுகையில், "இந்தியாவில் இருக்கிற 543 நாடாளுமன்றத் தொகுதிகளில், தேனி தொகுதிதான் அதிக வாக்கு வித்தியாசத்தில் முதலிடம் பிடிக்க வேண்டும். அதிமுகவின் கூட்டங்களை பார்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈரோட்டில் இருந்து வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தனது சொந்த ஊருக்கே சென்று விடுவார்" என்றார்.