தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களின் மனதில் டிடிவி முகமே சின்னமாக பதிந்துள்ளது: அமமுக வேட்பாளர் - Theni

தேனி: மக்களின் மனங்களில் டிடிவி தினகரனின் முகமே சின்னமாக பதிந்துள்ளதால் எந்த சின்னமாக இருந்தாலும் மக்கள் தங்களை வெற்றி பெற வைப்பார்கள் என அமமுக சார்பில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர் ஜெயக்குமார்

By

Published : Apr 3, 2019, 9:03 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இதனிடையே ஆண்டிபட்டியில் உள்ள தனது தேர்தல் பணிக்குழு அலுவலகத்தில் இன்று நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தேனி தொகுதியில் டி.டி.வி.தினகரன் நின்றால் அவரை டெபாசிட் இழக்க செய்வேன் என்று ஆணவமாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பேசியதால், தங்கதமிழ் செல்வன் தேனியில் போட்டியிடுகிறார். அதன் காரணமாக ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளது. டிடிவி தினகரனின் முகமே சின்னமாக மக்கள் மனதில் பதிந்துள்ளதால், எந்த சின்னம் கிடைத்தாலும் மக்கள் எங்களை வெற்றி பெற வைப்பார்கள்.

மக்களின் மனதில் டிடிவி முகமே சின்னமாக பதிந்துள்ளது: அமமுக வேட்பாளர்!

தொகுதியின் வளர்ச்சிக்காக ஆண்டிபட்டி பகுதிகளில் நிலவுகின்ற வறட்சியை போக்க, முல்லை பெரியாற்றில் இருந்து குழாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து இங்குள்ள கண்மாய்களில் நிரப்புதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். குடும்ப அரசியல் என்று தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் தற்போது தனது தம்பி, மகன் என்று அவரது குடும்பத்தினருக்கு வாய்ப்புகள் வழங்கி வருகிறார். அவரது குடும்ப அரசியலை எதிர்த்து மக்களிடம் பரப்புரை செய்ய உள்ளோம்.

மூன்று முறை ஆண்டிபட்டித் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தங்கதமிழ்செல்வனை எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. வாக நடத்தியவர் ஓபிஎஸ். தொகுதி வளர்ச்சிக்காக எந்த உதவிகளையும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியவர் ஓபிஎஸ். இரண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதியில், தனக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது" எனத் தெரிவித்தார்.



ABOUT THE AUTHOR

...view details