கேரளா மாநிலம், மூணாறு அருகே உள்ள ராஜமலைப்பகுதியில் மாட்டுத்தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த 10 மாடுகளை புலி ஒன்று இரண்டு நாட்களாகத் தொடர்ந்து தாக்கிக் கொன்றது. இதனால் இந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போன நிலையில் புலியைப் பிடிக்க வனத்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலி வெறி பிடித்து திரிவதால் அதனை மயக்க ஊசி அடங்கிய துப்பாக்கி மூலமாக சுட்டுப்பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு புலியினைத்தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக புலியின் அட்டகாசத்தால் அச்சத்தில் இருந்த மக்களுக்கு, மேலும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக மீண்டும் காட்டைவிட்டு புலி, ராஜமலைப்பகுதியில் உள்ள மாட்டுத்தொழுவத்தை நோக்கி வரும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.