கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை, ஆசியாவிலேயே அதிக உயரமான வளைவுகளை கொண்ட 2-ஆவது பெரிய அணை. இந்த அணை 2,408 மீட்டர் அதாவது 554 அடி உயரம் கொண்டது. இந்நிலையில் சமீபகாலமாக கேரளாவில் பெய்த கன மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
தற்போது அணையில் நீர் இருப்பில் 92% நீர் உள்ள நிலையில் இடுக்கி அணை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று(ஆக.06) ரெட் அலர்ட் விடப்பட்டது. இந்த நிலையில் இன்று(ஆக.07) அணையிலிருந்து கேரள மாநில நீர்பாசன துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் நீரை திறந்து வைத்தார்.
5 மதகுகள் கொண்ட இந்த அணையில் 3-ஆவது மதகிலிருந்து ஷட்டர் 70 செ,மீட்டர் உயரத்திற்கு தூக்கபட்டு 50 ஆயிரம் லிட்டர் அதாவது, 1765 கன அடி நீர் அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.