தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருவியில் குளித்த தலைமை காவலர் மூச்சுத் திணறி உயிரிழப்பு - தேனி கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவியில் குளித்தபோது தலைமை காவலர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சுற்றுலாப்பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

deathஅருவியில் குளித்த தலைமை காவலர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
அருவியில் குளித்த தலைமை காவலர் மூச்சுத் திணறி உயிரிழப்பு

By

Published : Sep 18, 2022, 8:53 PM IST

தேனி: புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற தலைமை காவலர், தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில், இன்று(செப்.18) தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கு சென்றுள்ளார். அருவியில் குளித்தபோது ஹரிஹரன் மயங்கி விழுந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், அருவியில் குளித்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்க, சுற்றுலாத் தளங்களில் முதலுதவி செய்வதற்கான உரிய உபகரணங்களையும், செவிலியர்களையும் பணியில் அமர்த்த வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க:56 இஞ்ச் மோடி ஜீ சாப்பாடு - 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் பரிசு

ABOUT THE AUTHOR

...view details