தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழமுத்தனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவர் அதே பகுதியில் தோட்டத்து வேலைக்குச் சென்ற 35 வயது திருமணமான பெண்ணை வலுகட்டாயமாக தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
தோட்டத்துக்கு வேலைக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது! - Theni District News
தேனி: ஆண்டிபட்டி அருகே தோட்டத்து வேலைக்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைதான ராஜ்குமார்
இதில் பாதிக்கப்பட்ட பெண் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ராஜ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தோட்டத்திற்கு வேலைக்குச் சென்ற பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்கள்!