தேனி மாவட்டம், கம்பம் அருகே மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவதாகக் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கம்பம் சுருளிப்பட்டி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து, வாகனத்தில் இருந்த சேகர், டேவிட் ராஜா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அரசு மதுபானக்கடை எண்: 8551–ல் மேற்பார்வையாளராக பணிபுரியும் கருப்பையா என்பவர், கம்பத்தைச் சேர்ந்த தனியார் மதுபானக் கடை உரிமையாளர் வெங்கடேசன் என்பவருக்கு சட்ட விரோதமாக விற்ற மதுபானங்களை சில்லரையாக மறு விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாகக் கூறினர்.