தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரிடம் மோதலில் ஈடுபட்ட கும்பல் - 5 பேர் கைது - 5 பேர்

தேனி: ஆண்டிபட்டி அருகே சுப நிகழ்ச்சியில் தகராறில் ஈடுபட்டவர்களுக்கும், தடுக்கச் சென்ற காவல் துறையினருக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல் துறையினர் குவிப்பு

By

Published : Jun 10, 2019, 8:16 AM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் வனராஜா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது இல்ல விஷேச வைபவம் வைத்துள்ளார்.

இந்நிலையில், விஷேசத்திற்கு வந்தவர்களில் சிலர் மதுபோதையில் சாலையில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அவ்வழியே சென்றுகொண்டிருந்த கடமலைக்குண்டு காவல் ஆய்வாளர் முருகன் சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தவர்களை விரட்டி விட முற்படுகையில், அவர்கள் ஆய்வாளரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள்

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் தலைமறைவாகினார். இதனையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவுப்படி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுருளிராஜ் தலைமையில் மூன்று காவல் துணை கண்காணிப்பாளர்கள் கொண்ட குழுவினர், அதிரடியாக கடமலைக்குண்டு பகுதிக்குள் வந்து தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.

காவல் துறையினர் குவிப்பு

அப்பொழுது, கடமலைக்குண்டு உப்போடை தெருவில் மறைந்திருந்த வனராஜா, ஜெயசந்திரன், ஜெயராஜா, அழகர்ராஜா, ராஜாமணி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர். இதன் காரணமாக கடமலைக்குண்டு கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த விக்னேஸ் என்ற காவலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details