தேனி மாவட்டம் போடி அருகே துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் முருகப்பா(53). இவருக்கு சொந்தமாக ஆற்றின் தங்கப்பாலத்திற்கு அருகே கல்குவாரி ஒன்று உள்ளது.
தேனியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்... மூவர் கைது!
தேனி: போடி அருகே கல்குவாரியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4000 கிலோ வெடிபொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், முருகப்பா கல்குவாரியில் வெடிபொருட்கள் இருப்பதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலின்படி, அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கல்குவாரி அருகேயுள்ள அவரது பண்னை வீட்டில் வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதில், 1,000கிலோ எலக்ட்ரிக் தாயத்துகள்(டெட்டனேட்டர்கள்), 3,000கிலோ வெடிமருந்துகள் என மொத்தம் 4 ஆயிரம் கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, துரைராஜபுரத்தைச் சேர்ந்த கல்குவாரி மேலாளர் குமரேசன்(45), பாறைகளில் வெடி வைப்பவரான அணைக்கரைப்பட்டி பெருமாள்(40) மற்றும் கல்குவாரி உரிமையாளர் முருகப்பா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குரங்கணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.