தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு பயிற்சி மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், தேனி ஆயுதப்படை காவலர், போடி தாலுக்கா காவல்நிலைய காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநர், கோகிலாபுரம் கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், ஆண்டிபட்டி பேரூராட்சி குடிநீர் விநியோக பணியாளர், டி.சுப்புலாபுரத்தில் செயல்படும் அரசு மதுபானக் கடை விற்பனையாளர் என இன்று ஒரே நாளில் 292 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 261 என உயர்ந்துள்ளது. போடியைச் சேர்ந்த 58 வயது நபர், பெரியகுளத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் மற்றும் தேனியைச் சேர்ந்த 45 வயது நபர் என நான்கு பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது.