திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சுரேந்திரனுக்கு அம்மாவட்ட காய்கறி மார்கெட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என அலுவுலர்கள் திடீர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஆயிரத்து 530 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவுலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
திருவண்ணாமலை: நகராட்சி அலுவலர்கள் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட் பகுதியில் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிளாஸ்டிக் பறிமுதல்
அரசு உத்தரவுப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் தவிர்க்குமாறும், பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.
இனிவரும், காலங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதத் தொகை மேலும் உயர்த்தப்படும் என்றும் நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.