நீலகிரி: நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், காட்டுநாயக்கன், குரும்பர், பணியர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் தோடர்கள் பயன்படுத்தும் சால்வைகள், பனியன்கள் உள்ளிட்டவற்றில் பதியப்படும் எம்பிராய்டரிங் பூ வேலைப்பாடு உலக பிரசித்தி பெற்றது.
இதன் காரணமாக அரசால் தோடர் சால்வைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தோடர் அல்லாத தனியார் அமைப்பினர் சிலர், பாரம்பரிய பூ வேலைப்பாடுடைய சால்வைகள் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.