தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊட்டி மலை ரயில் பாதையை வழிமறித்த காட்டு யானைகள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் காட்டு யானைகள் கூட்டம் ரயில் பாதையை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூரில் ரயில் பாதையை வழிமறித்த காட்டு யானைகள்
குன்னூரில் ரயில் பாதையை வழிமறித்த காட்டு யானைகள்

By

Published : Jan 26, 2023, 11:30 AM IST

குன்னூரில் ரயில் பாதையை வழிமறித்த காட்டு யானைகள்

நீலகிரி: குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை அருகே கிளண்டேல், சின்னக்கரும்பாலம், உலிக்கல் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 2 குட்டியுடன் கூடிய 9 காட்டு யானைகள், கடந்த மாதம் 16 ஆம் தேதியிலிருந்து இப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளது. இவை குடியிருப்புகளுக்கு வந்து விடாமல் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த யானைகள் கூட்டம், குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே ரயில் பாதையை வழிமறித்தது. மலை ரயில் பாதையில் காட்டு யானைகளால் வழிமறித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் ரயில்வே பணியாளர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை ஊழியர்கள் யானைகளை விரட்ட போராடினர்.ஆனாலும் ரயில் பாதையிலேயே உலா வந்த யானைகள் சிறிது நேரத்திற்கு பிறகு அடர் வனப்பகுதிக்குள் சென்றனர்.

இதையும் படிங்க:கோயில் யானைக்காக கட்டப்பட்டுள்ள நீச்சல் குளத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு

ABOUT THE AUTHOR

...view details