தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவீரர்களின் நினைவு சதுக்கத்தில் அஞ்சலி செலுத்திய லெப்டினென்ட் ஜெனரல் - nilgris district news

ராணுவப் பயிற்சி கல்லூரி அருகே உள்ள போர் நினைவு சதுக்கத்தில் லெப்டினென்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

western-regional-leader-of-the-indian-army
western-regional-leader-of-the-indian-army

By

Published : Aug 2, 2021, 12:51 PM IST

நீலகிரி: குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இளம் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு படைப்பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன.

இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்ற மேற்கு பிராந்திய படை வீரர்களின் தலைமை அலுவலகத் தலைவர், மெட்ராஸ் ரெஜிமென்ட் லெப்டினென்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங் இன்று(ஆக. 2) மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்திற்கு வருகைதந்தார்.

அஞ்சலி செலுத்திய லெப்டினென்ட் ஜெனரல்
அங்கு, தாய் நாட்டிற்காக தங்களின் இன்னுயிர் நீத்த மாவீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களைப் போற்றும்விதமாக ராணுவ பயிற்சி கல்லூரி அருகே உள்ள போர் நினைவு சதுக்கத்தில் மஞ்சிந்தர் சிங் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details