நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் வாரியத்தில் ஐந்தாயிரம் குடும்பங்கள் உள்ளன.
இங்கு 2019ஆம் ஆண்டு துாய்மை இந்தியா திட்டத்தில் ரூ.50 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு காரணங்களால் கால தாமதம் ஏற்பட்டது. தற்போது அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.