தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இவ்வளவுதான் ஆ.ராசாவின் சொத்து மதிப்பா..? - polls

நீலகிரி: நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா, தன்னுடைய வேட்புமனுவில் சொத்து மதிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்.

ஆ.ராசா

By

Published : Mar 26, 2019, 2:30 PM IST

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்றுஉதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆ.ராசா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பு விவரம்:

அசையும் சொத்து:
ஆ.ராசா - ரூ.3 கோடியே 14 லட்சத்து 54ஆயிரத்து 372
மனைவி பரமேஸ்வரி - ரூ.12 கோடியே 9 லட்சத்து 18 ஆயிரத்து 444
மகள் மையூரி - ரூ.1 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரத்து 828

அசையா சொத்து:
ஆ.ராசா - ரூ.31 லட்சத்து 11 ஆயிரத்து 324
மனைவி பரமேஸ்வரி - ரூ.14 லட்சத்து 18 ஆயிரத்து 925
குடும்பம் - ரூ.14 லட்சத்து 53ஆயிரத்து 875
மொத்தம் - ரூ.59லட்சத்து 84ஆயிரத்து 124

கடன் - ரூ.25லட்சத்து 52ஆயிரத்து 260

மொத்த சொத்து மதிப்பு - ரூ.5 கோடியே 55லட்சத்து 75ஆயிரத்து 703 என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில், ஆ.ராசா தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து மதிப்பு:

அசையும் சொத்து:
ஆ.ராசா - ரூ.1 கோடியே 45 லட்சத்து 90 ஆயிரத்து 709
மனைவி பரமேஷ்வரி - ரூ.93 லட்சத்தி 93 ஆயிரத்தி 897
மகள் மையூரா – ரூ.18 லட்சத்து 15 ஆயிரத்து 400
மேலும் குடும்ப சொத்தில் பங்கு :
1) ரூ.18 லட்சத்து 15 ஆயிரத்தி 400
2) ரூ.41 லட்சத்து 3 ஆயிரத்து 540

மொத்தம் - ரூ. 2 கோடியே 57லட்சத்து 99ஆயிரத்து 706

அசையா சொத்து:
ஆ.ராசா - ரூ.32 லட்சத்து 85 ஆயிரத்து 375
மனைவி பரமேஷ்வரி - ரூ.14 லட்சத்து53 ஆயிரத்து825

மொத்தம் - ரூ.61 லட்சத்து 52 ஆயிரத்து 225

கடன்:
ஆ.ராசா - ரூ.61 லட்சத்து 3ஆயிரத்து 940
பரமேஷ்வரி - ரூ.3 லட்சத்து92 ஆயிரத்து864
மற்றவை : ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து263

மொத்த சொத்து மதிப்பு - ரூ.3 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 900


2019 நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பு,கடந்த 2014 தேர்தலை காட்டிலும் ரூ.2 கோடியே 50 லட்சத்து 36ஆயிரத்து 803 அதிகமாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details