சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நீலகிரி கிழக்குச்சரிவு வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி. வனப்பகுதியில் வசிக்கும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடிநீர் தேடி அணைப் பகுதிக்கு வருவது வழக்கம். அதுபோல், நீர் அருந்திய பின் மாலை நேரங்களில் பறவைகள் கூட்டம் கூட்டமாக தனது இருப்பிடம் நோக்கி பறந்து செல்கின்றன.
பவானி அணையில் பறவைகள் சரணாலயம்! - பறவைகள் சரணாலயம்
நீலகிரி: பவானிசாகர் அணைப் பகுதியில் இரை தேடி முகாமிட்டுள்ள பறவைகள் மாலை நேரங்களில் வானில் கூட்டமாக பறக்கும் காட்சி சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இவ்வாறு பறவைகள் வானில் வட்டமிட்டு பறந்துசெல்லும் காட்சி காண்போருக்கு விருந்தாக உள்ளது. பகல் நேரங்களில் நீர்த்தேக்கப் பகுதியில் இரை தேடும் பறவைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் உள்ள உயர்ந்த மரங்களின் மீது அமர்ந்தபடி ஓய்வெடுக்கின்றன. இப்பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாததால் பறவைகள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் வசிப்பதாக பறவை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.