தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெற்றி பெற்றால் 3 மாதத்திற்கு ஒருமுறை வருவேன் - விஜய பிரபாகரன் - Vijay Prabhakaran campaigns in support of Kudalur constituency candidate Yogeswaran

நீலகிரி: தேர்தலில் வெற்றி பெற்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நான் இந்தத் தொகுதிக்கு வந்து உங்கள் குறைகளை கேட்டு அறிவேன் என விஜயபிரபாகரன் வாக்குறுதி அளித்தார்.

கூடலூர் தொகுதியில் விஜயபிரபாகரன் பரப்புரை
கூடலூர் தொகுதியில் விஜயபிரபாகரன் பரப்புரை

By

Published : Mar 27, 2021, 9:42 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணி (எ) யோகேஸ்வரனுக்கு ஆதரவாக அக்கட்சி பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "கூடலூரில் இருந்து மைசூரு செல்வதற்கு மேம்பாலம் அமைக்கப்படும். கூடலூர் பகுதியில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் தலைமை மருத்துவமனை அமைக்க ஏற்பாடு செய்து தரப்படும். தேயிலை விவசாயம் செய்யும் மக்களுக்கு நல்ல சம்பளம் வழங்க வழிவகை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

கூடலூர் தொகுதியில் விஜயபிரபாகரன் பரப்புரை

மேலும் பேசிய அவர், “தேமுதிக வேட்பாளர் யோகேஸ்வரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்யுமாறு கேட்டுகொண்டு வெற்றி பெற்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை நான் இந்த தொகுதிக்கு வந்து உங்கள் குறைகளை கேட்டு அறிவேன்” என வாக்குறுதி அளித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details