நீலகிரி மாவட்டம் குன்னூரில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திரைப்பட நடிகரும், முரசொலி நிர்வாக இயக்குநருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மோடி வில்லன், ஓபிஎஸ் கைக்கூலி: உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
நீலகிரி: குன்னூரில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து தேர்தல் பரப்புரை நிகழ்த்திய உதயநிதி ஸ்டாலின் மோடியை வில்லன் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை கைக்கூலி என்றும் கடுமையாக விமர்சித்தார்.
"44 முறை விமானத்தில், 55 நாடுகளுக்கு சென்று ஐந்தாயிரம் கோடி செலவு செய்தவர் நரேந்திர மோடி. ஆனால் வர்தா மற்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக வழங்கியது வெறும் 10 சதவீதம்தான். தமிழ்நாடு ஐந்து ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மோடிக்கு எதிர்ப்பு அலை வீசும்போது ஸ்டாலினுக்கு ஆதரவு அலை வீசுகிறது. மோசடி வில்லனாக மோடியும், கைக்கூலிகளாக ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையின்படிநீட் தேர்வு மற்றும் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். எனவே வரும் தேர்தலில் திமுக வேட்பாளர் ராசாவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.