பிரபல சுற்றுலாத் தளமான உதகை மான் பூங்கா, 1992ஆம் ஆண்டு படகு இல்லத்தின் அருகில் அமைக்கப்பட்டது. புள்ளி மான், கட மான் வகைகள், வாத்து வகைகள், பறவைகள் உள்ளிட்ட பல உயிரினங்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வந்தன. ஆனால் நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி, பூங்காவில் வளர்க்கப்பட்ட பறவைகள், வாத்துகள் உயிரிழந்தன.
தற்போது 15 கடமான்கள், நான்கு புள்ளி மான்கள் மட்டுமே இங்கு உள்ளன. இந்நிலையில், மான்களை வனப்பகுதியில் விட்டு, பூங்காவை மூடவும், பூங்காவில் வரையாடு இனப்பெருக்க மையம் அமைக்க உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.