நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அமைந்துள்ளது வள்ளுவர் நகர் கிராமம். இப்பகுதியைச் சுற்றி வாசுகி நகர், வசம் பள்ளம், ஒட்டுப்பட்டரை ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நாய், பூனை, காகம், காட்டுப் பன்றிகள் என மொத்தம் 20 பிராணிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. திடீரென்று பிராணிகள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.