நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் உள்ளது சிம்ஸ் பூங்கா. 30 ஏக்கர் பரப்பளவிலான இப்பூங்காவில் யூகலிப்டஸ், மேப்பில், யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகித மரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிம்ஸ் பூங்காவிற்கு தாவிரவியல் மாணவர்கள், வேளாண்மை மாணவர்கள், பறவை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
வெள்ளத்தில் சேதமடைந்த சிம்ஸ் பூங்காவை சீரமைக்க கோரிக்கை - heavy rain
நீலகிரி: வெள்ளத்தில் சேதமடைந்த சிம்ஸ் பூங்காவை சீரமைக்குமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத தொடர் கனமழையால், சிம்ஸ் பூங்காவில் இருந்த பத்திற்கும் மேற்பட்ட அரியவகை மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ‘சிம்ஸ் பூங்காவில் தற்போது சாய்ந்துள்ள மரங்களை மீண்டும் நடவு செய்து பராமரித்து வர வேண்டும். மரங்களைப் பாதுகாப்பதன் மூலம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும், தாவரவியல் மற்றும் வேளாண்மை மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.