தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் காட்டு சூரியகாந்தி! - நீலகிரி சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் - குன்னூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காட்டு சூரியகாந்தி பூக்களை சுற்றுலாவாசிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து-வருகின்றனர்.

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் காட்டு சூரியகாந்தி தொடர்பாக பேசும் இயற்கை ஆர்வலர் தொடர்பான காணொலி
நீலகிரியில் பூத்துக் குலுங்கும் காட்டு சூரியகாந்தி தொடர்பாக பேசும் இயற்கை ஆர்வலர் தொடர்பான காணொலி

By

Published : Nov 23, 2021, 8:13 AM IST

நீலகிரி: நீலகிரியில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிலச்சரிவைத் தடுக்கும் வகையில் காட்டு சூரியகாந்தி விதைகள் பல்வேறு பகுதிகளில் தூவப்பட்டன. இந்தப் பூக்கள் வறட்சி காலங்களில் பூத்துக் குலுங்கக் கூடியவை. இவை மண்ணின் உறுதித்தன்மை அதிகரிப்பதுடன், நிலச்சரிவையும் கட்டுப்படுத்தும் திறன்கொண்டது.

வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பூக்கும் காட்டு சூரியகாந்தி, தற்போது மேட்டுப்பாளையம் - குன்னூர் செல்லும் சாலையில் பரவலாகப் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் காட்டு சூரியகாந்தி தொடர்பாக பேசும் இயற்கை ஆர்வலர் தொடர்பான காணொலி

கண்களுக்கு குளிர்ச்சி தரும் வண்ணம் கொண்ட பூக்களை, சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். அண்மையில் பெய்த மழையால் சூரியகாந்தி செடிகளும் செழுமையாக வளர்ந்துள்ளன. இதனால் நிலச்சரிவு ஆபத்து நீங்கியிருப்பதாக இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் சிக்கிய பசுக்கள்: துரிதமாக மீட்பு

ABOUT THE AUTHOR

...view details