தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் பக்காசூரன் மலைக்கு சுற்றுலாப்பயணிகள் செல்லத் தடை! - coonoor pakkasuran mountain

நீலகிரி: கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வனத் தீ ஏற்பட்டுவருவதால், குன்னுார் பக்காசூரன் மலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினர் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

the nilgiris

By

Published : Mar 17, 2019, 11:35 AM IST

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காட்டுத் தீ ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், குன்னூர் பக்காசூரன் மலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல இடங்களிலும் காட்டுத் தீ ஏற்பட்டு வனங்கள் எரிந்து நாசமாகிவருகின்றன. இதனால், அரியவகை, மூலிகைச் செடிகள் எரிந்துநாசமாகின.

நீலகிரி மாவட்டம் முதுமலை, கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் பகுதிகளில், தீவிபத்து அதிகளவில் ஏற்பட்டுள்ளதால், குன்னூர் பகுதிகளிலும், பக்காசூரன் மலைக்கும் தற்போது வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குன்னூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பக்காசூரன் மலை. இந்த மலையில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் இயற்கைக் காட்சிகள் அனைவரையும் கவர்ந்துவருகிறது. இதேபோல் மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து வருவது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளது. மேலும், அரியவகை விலங்கினங்களையும் காண முடியும்.

சமீபத்தில், குரங்கனி மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், இதுபோன்ற மலைப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details