தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உதகை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 19 பேர் காயம்! - சுற்றுலா வேன் விபத்து

உதகை அருகே சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பேர் காயம் அடைந்தனர்.

Kotthagiri accident
கோத்தகிரி விபத்து

By

Published : May 14, 2023, 4:28 PM IST

உதகை:பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுத்துள்ளனர். சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த 19 பேர், உதகை செல்ல கடந்த வெள்ளிக்கிழமை வேனில் புறப்பட்டனர். நேற்று (மே 14) காலை உதகைக்கு வந்த அவர்கள், பல்வேறு சுற்றுலாத்தலங்களைக் கண்டு களித்தனர்.

பின்னர் இன்று (மே 15) காலை உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வேனில் புறப்பட்டனர். கோத்தகிரி மலைப்பகுதியில் கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் வந்தபோது, வேன் பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் இருந்தவர்கள் அலறினர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை; 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த பொள்ளாச்சி போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details