தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் பகுதியில், தேர்தல் ஆணையத்தின் சர்வே குழு அதிகாரி ஜெயஸ்ரீ தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.
திமுக-வின் ஸ்டிக்கர்கள், பதாகைகளை பறக்கும்படை பறிமுதல்!
நீலகிரி : குன்னூர் பர்லியார் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட திமுக-வினரின் ஸ்டிக்கர்கள், பதாகைகள் ஆகியவற்றை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
conoor
அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சம் மதிப்பிலான திமுக-வின் ஸ்டிக்கர்கள் மற்றும் பதாதைகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் உடனடியாக லாரியுடன் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்த லாரி குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.