குன்னூரில் செல்ஃபி மோகத்தால் எல்லைமீறும் சுற்றுலாப் பயணிகள்
ஊட்டி: குன்னூர் சுற்றுலாத் தலங்களில் அத்துமீறி செல்பி புகைப்படம் எடுப்பவர்கள் மீது வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
குன்னூரில் செல்பி மோகத்தால் எல்லை மீறும் சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் ஆரம்பமாகி உள்ளது. கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் குறிப்பாக குன்னூரில் உள்ள டைனோசர் போன்ற மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசிக்காமல் செல்வதில்லை. இவ்விடத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காப்பு தடுப்புகளைத் தாண்டி செல்ஃபி எடுத்து வருகின்றனர்.