குன்னூர் வெலிங்டன் சுற்றுப்பகுதியில் காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.இந்நிலையில் பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி காட்டெருமை ஒன்று கடந்த மூன்று நாட்களாக வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் சுற்றி திரிந்துள்ளது.
வனத்துறையினர் அலட்சியத்தால் உயிரிழந்த காட்டெருமை! - gaur death in coonoor
நீலகிரி:குன்னூர் வெலிங்டன் பகுதியில்,பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கிய காட்டெருமை வாய்கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது
இதுபற்றிய தகவல் பொதுமக்களால் வனத்துறை அலுவலர்களுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது. அங்கு வந்த வனத்துறையினர் காட்டெருமையை மீட்டு உடனடியாக சிகிச்சையளிக்காமல்,வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி எடுத்துள்ளனர்.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக வாய்கிழிந்து சுற்றிதிரிந்த காட்டெருமை உணவு,நீர் அருந்த முடியமால் பரிதாபமாக உயிரிழந்தது.
வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்காததே காட்டெருமை உயிரிழப்பிற்கு காரணம் என்று விலங்கு ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.கடந்த ஆண்டில் மட்டும் இதே போன்று 3 காட்டெருமைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.