மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை செல்லும் மலை ரயில் ஆங்கிலேயர்களால் 1899 ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 1909ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
இதனால் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15 நாள் நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசியாவிலேயே 22 கிலோ மீட்டர் மலைப்பாதையில் பயணிகளை கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமைக்குரியது. இந்த ரயில் 208 பாலங்கள், பதினாறு குகைகள் வழியாக பயணித்து சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது.
உலகப் பாரம்பரிய ரயிலின் 14காம் ஆண்டு துவக்க விழா! இதன் காரணமாக 2005ஆம் ஆண்டு நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்தது.
பாரம்பரிய சின்னமாக அறிவித்து 13 ஆண்டுகள் நிறைவடைந்து 14 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக குன்னூர் ரயில் நிலையத்தில் ஊட்டி தனியார் கல்லூரி மாணவ மாணவியர்கள் மலை ரயிலில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளை மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். மேலும் சுற்றுலாப்பயணிகள் இந்த விழாவில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு கொண்டாடினார்கள்.
நீலகிரி மலை ரயில் 106 ஆண்டுகளுக்கு மேல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான ரயில் பாதையில் தற்போது ஒரு நீராவி எஞ்சின் ரயில் மட்டுமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.