நீலகிரி மாவட்டத்தில் 153அரசுப் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் உதகை தாலூகாவில் உள்ள தங்காடு அரசு நடுநிலைப்பள்ளி, டி.ஓரநல்லி ஆரம்ப பள்ளி, கெத்தை ஆரம்ப பள்ளி, காந்திபுரம் ஆரம்ப பள்ளி ஆகிய பள்ளிகள் தற்போது 2019ஆம் கல்வி ஆண்டில் மூட நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. இதனால் அந்தப் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் பலகிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு! - நீலகிரி
நீலகிரி: உதகைமண்டலம் தாலுகாவில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளை மூட பெற்றோர்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு
பல சிரமங்களை கடந்து இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளி வரும்நிலையில் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிகள் மூடப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாற்றப்பட்டுள்ள பள்ளிகள் வனவிலங்குகள் நடமாடும் பகுதி என்பதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப யோசித்து வருகின்றனர். இதனால் பள்ளிகள் மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.