நீலகிரி:அரசு தேயிலைத் தோட்டங்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவு உள்ளன. இங்குள்ள கூடலூர், பாண்டியாறு, நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு, கொளப்பள்ளி, கோத்தகிரி, நடுவட்டம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டங்களில் (டேன்டீ) நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லியாளம் அரசு தேயிலைத் தோட்டத்தில் வள்ளியம்மாள் (60) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தேயிலைத் தோட்டத்திற்கு தேயிலைப் பறிக்கச் சென்றுள்ளார். அப்போது இவரை புலி தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.