தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.8.46 லட்சம் மதிப்புள்ள 168 செல்போன் டவர் பேட்டரிகள் திருட்டு! - Theft of BSNL Cell Phone Tower Batteries in Gudalur

நீலகிரி: ஆறு பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களில் பொருத்தபட்டிருந்த ரூ. 8.46 லட்சம் மதிப்புள்ள 168 சேமிப்பு பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன.

Theft of BS NL cell phone tower batteries in Nilgiris
Theft of BS NL cell phone tower batteries in Nilgiris

By

Published : Dec 18, 2019, 5:29 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றி வனப்பகுதிகள் அடர்ந்து காணப்பகுகிறது. இங்கு மக்களுக்கான தொலைத் தொடர்பு சேவை வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன் கோபுரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழை, காற்றின் வேகம் அதிகமாக உள்ள காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நகர் பகுதிகளில் மட்டும் சேவை வழங்குகிறது.

இதனிடையே, செல்போன் கோபுரங்களில் மின்சார தடை ஏற்பட்டால் கோபுரத்தை இயக்க பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பந்தலூர் தாலுக்காவிற்குட்பட்ட நெல்லியாளம், அம்பலவயல், கரைக்கொல்லி, கொளப்பள்ளி, வெள்ளச்சால் போன்ற பகுதிகளில் இன்று மின்சாரம் தடைபட்ட நிலையில், ஆறு பிஎஸ்என்எல் கோபுரங்களிலிருந்து தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பேட்டரிகள் திருடுபோன செல்போன் டவர்

இதையடுத்து, பிஎஸ்என்எல் உழியர்கள் ஆய்வு செய்தபோது ஆறு கோபுரங்களில் பொருத்தபட்டிருந்த எட்டு லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 168 சேமிப்பு மின்கலங்கள் (பேட்டரிகள்) திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினருக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றார்.

இதையும் படிங்க:மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம்! சீரழிந்திருக்கக் கூடாது!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details