நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவதும், அங்குள்ள தொட்டிகளில் உள்ள நீரை அருந்திச் செல்வது, விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவதும் உள்ளிட்ட செயல்களால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
மரத்தின் மீது பேரிக்காய் உண்ணும் கரடியை துரத்தும் முயற்சியில் காட்டெருமை இந்நிலையில் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதியில், சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. அவைகள் கூட்டத்துடனும், மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் அதிகம் காணப்படுகிறது.
தற்போது மாதா கோயில் அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கரடி ஒன்று மரத்தின் மீது பேரிக்காயை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது, காட்டெருமை ஒன்று கரடியை கீழே இறங்க விடாமல் மரத்தை முட்டியது.
இதனால், கரடி மரத்தின் மேல்கிளையில் ஏற முயற்சித்தது. இந்தக் காட்சியை அவ்வழியாகச்சென்ற பொதுமக்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இக்காட்சி சற்று சிரிப்புடனும், கரடியிடம் காட்டெருமை இங்கு ஏன் வந்தாய்? என்று கேட்பதுபோலவும் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: 'மின் கம்பியில் சிக்கி 4 வயது யானை உயிரிழப்பு'