நீலகிரியில் சமீபகாலமாக வனப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் அழிக்கப்பட்டு கட்டட காடுகளாக மாறிவருவதால் உணவு, தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், வெலிங்டன் குடியிருப்பு பகுதியில் காட்டெருமை ஒன்று பகல் நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.
சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டெருமையால் பொதுமக்கள் அச்சம் - நீலகிரி
நீலகிரி: வெலிங்டன் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டெருமை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ROAD SIDE
இதனைக் கண்டு பள்ளிக் குழந்தைகள், அலுவலகப் பணியாளர்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்வதற்க்கு அச்சபடுகின்றனர். மேலும் சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.