நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை 46.5 கிலோ மீட்டர் துாரம் கொண்டது மலை ரயில். இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் அமைந்துள்ள அழகிய இயற்கை எழிலையும், வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகளையும் கண்டு ரசிக்கலாம்.
மலைப்பாதை தண்டவாளத்தில் பல் சக்கரம் மூலம் ரயில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாக செல்லும் இந்தத் தண்டவாளத்தில் ரயிலில் பயணம் செய்வது சுவையான அனுபவம். இதை ரசிக்கவே சுற்றுலா பயணிகள் மலை ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆசியாவிலேயே உதகை மலை ரயிலில்தான் பல் சக்கர தண்டவாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இன்றி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.