மத்திய அரசின் அறிவிப்பின்படி வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டி மற்றும் பேருந்துகளில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் 72க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள், கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்காததால் எர்ணாகுளத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளம் வழியாக சாலக்குடிக்கு நடந்தே வந்துள்ளனர்.
பின்னர், அவ்வழியாக வந்த ஒடிஸாவைச் சேர்ந்த லாரியில் கர்நாடக மாநிலம் மைசூர் வரை தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர். இதையடுத்து, அந்த லாரி ஓட்டுநர் வடமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தமிழ்நாடு - கர்நாடக எல்லையான முதுமலை வனப்பகுதியை கடக்கும்போது சோதனைச் சாவடியில் ஈடுபட்ட காவல்துறையிடம் 72 தொழிலாளர்களும் சிக்கினர்.
இதையடுத்து, அவர்கள் லாரியிலிருந்து இறக்கிவிடப்பட்டு, பின்னர் காவல்துறை தரப்பில் வருவாய்த் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து முதுமலை வனப்பகுதிக்கு வந்த வாருவாய்த் துறையினர், காவல்துறையிடம் சிக்கிய 72 தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.