நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள ஏராளமான விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டத்திற்குள் ஊடு பயிராக பேரிக்காய் மரங்களை நட்டு பாரமரித்துவருகின்றனர். இந்த மரங்களிலிருந்து ஆண்டிற்கு இரண்டு முறை கிடைக்கும் பேரிக்காய் மூலம் நல்ல வருமானம் பெற்றுவந்தனர். இந்நிலையில் போதிய மழை இல்லாததால் பேரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
மழை இல்லாததால் பேரிக்காய் விளைச்சல் வீழ்ச்சி! - formers stuff
கோத்தகிரி : போதிய மழை இல்லாததால் கோத்தகிரி பகுதியில் பேரிக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல டன் பேரிக்காய் கிடைக்க வேண்டிய நிலையில் தற்போது சில டன் பேரிக்காய் மட்டுமே கிடைத்துள்ளதால் பேரிக்காய் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதனிடையே தற்போது அறுவடை செய்யப்படும் பேரிக்காய்கள் பெங்களுர், திருனந்தபுரம் மற்றும் சென்னை போன்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கபடுகின்றன. தற்போது ஒரு கிலோ பேரிக்காய் 30 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யபடுகிறது. இதனால் பேரிக்காய் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், உதகை, கூடலூர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் கோத்தகிரி பகுதியில் மழையில்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.