தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூகேஜி சிறுவனை ஆசிரியர் அடித்ததில் காதில் ரத்தம் வடிந்தது! - நீலகிரியில் யூகேஜி சிறுவனை ஆசிரியர் அடித்ததில் காதில் ரத்தம் வடிந்தது

நீலகிரி: தனியார் பள்ளியில் யூகேஜி படிக்கும் சிறுவன் சரியாக படிக்கவில்லையென ஆசிரியர் அடித்ததில் காதில் ரத்தம் வடிந்தது.

சிறுவன் சாகின்

By

Published : Sep 22, 2019, 10:45 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர் பெட்போர்டில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் யூகேஜி மாணவன் சாகின். சிறுவன் சரியாக படிக்காததால் வகுப்பாசிரியர் அவனை அடித்துள்ளார், இதன் காரணமாக காதில் ரத்தம் வடிந்துள்ளது.

பின்பு, இதுகுறித்து உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சிறுவனை ஆசிரியர் அடித்ததில் காதில் ரத்தம் வடிந்தது

குழந்தையை மூர்க்கத்தனமாக அடித்த ஆசிரியர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : மோட்டார் போட சொன்ன ஆசிரியர்; தூக்கி வீசப்பட்ட அப்பாவி மாணவன் உயிரிழப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details