நீலகிரி: வால்பாறையில் உள்ள 'டேன் டீ' எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் தலைமையில் நேற்று (நவ.20) கூடலூர் சுங்கம் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய அண்ணாமலை, "கூடலூரில் நடைபெறுவது பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்பாட்டமா மாநாடா என்பதுபோல் உள்ளது.
முதன்முதலாக தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து தமிழர்களை ஆங்கிலேயர்கள் இலங்கை தலைமன்னார்க்கு அகதிகளாக கப்பலில் அழைத்து செல்லப்பட்டபோது, ஏராளமானோர் உயிரிழந்தனர். பின்னர், சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் மீண்டும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக டேன் டீ பணி வழங்கப்பட்டது.
மத்திய அரசிடம் ஒப்படைக்கட்டும்:ஆனால், கேண்டின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக தமிழக அரசு 5,315 ஏக்கரை வனத்துறைக்கு ஒப்படைப்பதாக கூறியிருப்பது வேதனையடைய செய்துள்ளது. டேன் டீ-யை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி ஒப்படைத்துவிடுங்கள்.
டேன் டி கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தால் நிர்வாகத்தை லாபத்தில் கொண்டு செல்வோம். அப்படி கொண்டு சென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவி ராஜினாமா செய்வாரா என சவால் விடுத்தார்.
அதே போல், மின்சாரத்துறை லட்சம் கோடி கடனில் உள்ளது. ஆனால், டேன் டீ ரூ.218 கோடியில் மட்டுமே நஷ்டத்தில் உள்ளது. மின்துறை வேண்டும்; டேன்டீ வேண்டாமா? நான் நீங்களாக இருந்தால், ரூ.14 லட்சம் மதிப்பிலான வீடு தரப்படும் என்றது சொன்னதை ஏற்கமாட்டேன் என கூறினார்.
ஊட்டியில் நடந்த பணிகள் என்ன?:தமிழக வனத்துறை அமைச்சர் அவர் வீட்டு முன் பல ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். டாஸ்மாக் கடையில் Spring மினரல் வாட்டர் விற்கப்படுகிறது. அது கோபாலபுரத்தின் சொந்த தாயாரிப்பு. தமிழக முதலமைச்சர் டேன் டீ விற்பனையை இப்படி செய்தால் பல கோடி ரூபாய் வருவாய், டேன் டீ ஈட்டும். எந்த ஒரு கட்சியிலும் சுயமரியதை இல்லையென்றால், கட்சி வளராது.