நீலகிரி மாவட்டத்தில் முக்கிய தொழிலாக தேயிலை உள்ளது. இந்தத் தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கினால் இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
ஊதியமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்! - தேயிலை
நீலகிரி: தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரிம் ஊழியர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து, சாலையில் சமூக இடைவெளி விட்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிய அனுமதி அளித்துள்ளது. ஆனால் குன்னூர் அருகே சிங்காரா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் ஊதியம் வழங்க வேண்டும் என சாலையில் சமூக இடைவெளி விட்டு நின்று தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:வெடிமருந்து தொழிற்சாலையில் 'சானிடைசர்' தயாரிப்பு