நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைக்கிராமங்களுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பவானி எஸ்டேட் பகுதியில், நேற்றிரவு குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ஒற்றை காட்டுயானை, தேயிலை தோட்டத்தொழிலாளி முருகன் (43) என்பவரைத் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காலையில் முருகன் சடலமாக கிடப்பதைப்பார்த்த பொதுமக்கள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் கொலக்கம்பை காவல் துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.