நீலகிரி: உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உதகைக்கு வருகை தந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த அவர், ஏடிசி பகுதியில் பேசும்போது, தமிழ் மொழி பழைமையான மொழி, உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி தமிழ்தான். தமிழ்நாடு வளர்ச்சி பெறவேண்டிய மாநிலம், எனவே, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் மத்தியில் மோடி ஆட்சியும் அமையவேண்டும்.
கரோனா காலத்தில் பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டார். நமது நாட்டு விஞ்ஞானிகள் கரோனாவிற்கு புதிய தடுப்பூசி கண்டுபிடித்ததன் மூலம் 72 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா முதலமைச்சரின் தாய் குறித்து விமர்சித்துப் பேசியதை நான் கண்டிக்கிறேன். இது தமிழ்நாடு பெண்களை விமர்சிப்பதற்கு ஒப்பாகும்.