நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டிகள் ஏழு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில், குன்னூர், கோத்தகிரி, அருவங்காடு, உதகை உள்ளிட்ட இடங்களிலிருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டுள்ளன. முதல் போட்டியாக நெப்ட்யூன் ஹாக்கி அணியும் அருவங்காடு அணியும் மோதின.
மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி: அசத்தும் வீரர்கள்! - tournament
நீலகிரி: குன்னூரில் தொடங்கியுள்ள மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன.
அசத்தும் வீரர்கள்
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-1 என்ற கோல்க் கணக்கில் அருவங்காடு அணியைத் தோற்கடித்து நெப்ட்யூன் அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன