தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெலிங்டன் ராணுவ மையத்தில் சிறப்பு பயிற்சி முகாம் - ராணுவம்

குன்னூர்: வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவத்தின் மீது ஆர்வமுள்ள மாணவ மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

File pic

By

Published : May 26, 2019, 10:32 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதி மாநிலத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு ராணுவத்தின் மீது ஆர்வமுள்ள 110 மாணவ மாணவியருக்கு கோடைகால சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் மலையேற்ற பயிற்சி, குதிரை சவாரி, நெடுந்தூர நடைபயணம் துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட வீரசாகசப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தூய்மை இந்தியா குறித்து ஜெகதளா கிராமத்தை தூய்மைப் பணி மேற்கொண்ட அம்மாணவ மாணவிகள் நிறைவாக இயற்கையை பாதுகாக்கும் விதமாக 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளைநடவு செய்தனர்.

சிறப்புப் பயிற்சி குறித்து மாணவ மாணவிகள் கூறியதாவது, இந்தப் பயிற்சி முகாம் வருங்காலத்தில் ராணுவத்தில் பணியாற்ற அதிக ஆர்வம் தூண்டும் வகையில் அமைந்ததுள்ளதாக கூறினார்கள்.

ABOUT THE AUTHOR

...view details