மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் உமேஷ் கோபிநாத் ஜாதவ் (43). இசை ஆசிரியரான இவருக்கு கடந்த ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் போன்றோரின் சமாதிகளுக்கு சென்று அங்கிருந்து மண் சேகரித்து வருகிறார்.
அவ்வாறு சேகரித்த மண்ணை கொண்டு, ஜம்மு காஷ்மீரில் இந்திய வரைபடம் போல் அமையவுள்ள நினைவு தூணில் வைக்க உமேஷ் கோபிநாத் முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக, அவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளார். தொடர்ந்து, கார்கில் உள்ளிட்ட போர்களில் உயிர் நீத்தவர்கள் என இதுவரை 76 பேரின் சமாதிகளில் இருந்து மண் சேகரித்துள்ளார். இதற்காக 67 ஆயிரம் கிலோ மீட்டர் அவர் பயணித்துள்ளார்.